தாஜூடீன் விசாரணைகளுக்கு இடையூறாக உள்ள விடயம்
Thursday, 23 Jan 2020

தாஜூடீன் விசாரணைகளுக்கு இடையூறாக உள்ள விடயம்

20 August 2019 10:15 am

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கு கடற்படையினர் தகவல் வழங்காமையே இடையூறாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினர் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்ற விசாரணைப் பிரிவினருக்கு இது பற்றிய தகவல்களை வழங்காத காரணத்தினால் விசாரணைகளுக்கு தடங்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்படைவீரர்களின் நாளாந்த செயற்பாடுகளை குறிக்கும் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புத்தகத்தில் யோசித ராஜபக்சவின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.