மங்களவை யாரோ பிழையாக வழிநடத்துகின்றனர்
Monday, 27 Jan 2020

மங்களவை யாரோ பிழையாக வழிநடத்துகின்றனர்

22 July 2019 07:41 pm

அமைச்சர் மங்கள சமரவீரவை யாரோ பிழையாக வழிநடத்துகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்களின் முன்னாள் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

மிகச் சிறந்த லிபரல் அரசியல்வாதியான மங்களவின் இன்றைய நிலைமை வருத்தமளிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மங்கள சமரவீர இனவாத அடிப்படையில் எப்போதும் செயற்பட்டதில்லை அவரது கொள்கைகளை நான் மதிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான மங்கள சமரவீர தற்பொழுது ஜாதி அடிப்படையிலான அரசியல் செய்கின்றார் என்பது ஆச்சரியமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

மங்களவிற்கு யாரோ இத்த கயிறு கொடுத்துள்ளனர், அவர் அதற்கு ஏமாந்துள்ளார்.

மலிக் சமரவிக்ரம, சஜித் பிரேமதாச, மேர்வின் சில்வா, மஹிந்த அமரவீர போன்றவர்கள் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களே இவ்வாறு மங்களவை பிழையாக வழிநடத்தியிருக்க வேண்டுமென மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.