நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது – கர்தினால்
Tuesday, 10 Dec 2019

நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது – கர்தினால்

22 July 2019 07:32 pm

நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுவாப்பிட்டிய தேவாலய அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்பட்டமையே இதற்கான காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகி ஆட்சியை முன்னெடுக்கக்கூடியவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.