அமைச்சர் ருவானின் புதிய தலைவர்- ரூபவாஹினியில் குழப்பம்
Monday, 16 Dec 2019

அமைச்சர் ருவானின் புதிய தலைவர்- ரூபவாஹினியில் குழப்பம்

22 July 2019 07:12 pm

தேசிய ரூபாவாஹினியின் புதிய தலைவர் என்று கூறி ரூபாவாஹினி வளாகத்திற்கு வந்த ஒருவரினால் இன்று (22) பிற்பகல்குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சரான ருவான் விஜயவர்த்தன, சஞ்சீவ விஜேகுணவர்தனவை இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்து, ஜூலை 18 திகதி அன்று நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார். 

இருப்பினும் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் இன்னோகா சத்தியங்கனி,பதவி நீக்கமோ அல்லது ராஜினாமாவோ செய்யவில்லை.

அமைச்சர் இன்னோகா சத்தியங்கனியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது, இருப்பினும் அவர் அதனை மறுத்துவிட்டார் காரணம் அமைச்சருக்கு பதவி நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்பதனாலாகும்.

எனினும், சஞ்சீவ விஜேகுனவர்தேனாவை நியமித்தது சட்டவிரோதமானது என குறிப்பிடப்படுகிறது.

எனினும், இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சஞ்சீவ விஜேகுனவர்தேனாவை நியமிக்க, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, ஊடகத்துறை அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இன்னோகா சத்தியங்கனி, இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது முன்னாள் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினாலாகும்.  இதற்கு முன்பதாக இன்னோகா சத்தியங்கனியை நீக்கி விட்டு  சுதர்சன் குணவர்த்தனவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கவில்லை. அதன் பின்பு தலைவராக ஷான் விஜதுங்க பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

KK