ஜனாதிபதி தேர்தல் பற்றி எனக்கு கவலையில்லை
Monday, 16 Dec 2019

ஜனாதிபதி தேர்தல் பற்றி எனக்கு கவலையில்லை

22 July 2019 06:52 pm

ஜனாதிபதி தேர்தல் பற்றி தமக்கு கவலையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் என்பதனை தெரிவு செய்வது தமது பொறுப்பு கிடையாது எனவும் கட்சியின் செயற்குழு அதனை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விஹாரைகள் அமைப்பது, வீடுகளை நிர்மானிப்பது போன்ற பணிகளே தமது முதன்மைக் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்