பூஜித் ஹேமசிறி நீதிமன்றில் முன்னிலை
Monday, 16 Dec 2019

பூஜித் ஹேமசிறி நீதிமன்றில் முன்னிலை

22 July 2019 10:37 am

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

கொழும்பு கோட்டே நீதிமன்றில் இன்றைய தினம் இருவரும் முன்னிலையாகியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களை தடுக்காமை மற்றும் பொறுப்புக்களை துறந்து கொலைகளுக்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2ம் திகதி குறித்த இருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவியல் சட்டத்தின் 296ம் சரத்தின் பிரகாரம் மனித படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் இந்த இருவருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டுள்ளது.