கடுமையான முடிவெடுத்த முஸ்லிம் காங்கிரஸ்
Monday, 09 Dec 2019

கடுமையான முடிவெடுத்த முஸ்லிம் காங்கிரஸ்

22 July 2019 08:58 am

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை மீண்டும் அமைச்சரவை பதவிகளை ஏற்க மாட்டோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் உரையாற்றிய போதே  ஹக்கீம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள்வதற்கு முன் தனது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவை தீர்க்கப்படுகின்றன என்பதைக் காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக  முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்திருந்த போதிலும்,முன்னாள் அமைச்சர், அமைச்சரவை பதவிகளை விட்டு வெளியேறியதால், ஒரே நேரத்தில் பதவிகளை  ஏற்க முடியாது என்று கூறினார். 

உயிர்த்த  ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பல முஸ்லீம் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அவர் கூறினார், ஆனால் முறையான விசாரணைக்கு ஆதரவாக முஸ்லிம் அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

KK