ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு
Monday, 27 Jan 2020

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு

21 July 2019 03:17 pm

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியொருவர் தேவைப்படுவதாக மக்கள் கருதுகின்றனர் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

28 வீதமனாவர்கள் தற்போதைய அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனை விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்றாவது அரசியல் சக்தியொன்றின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் இளைஞர் அமைப்பு ஒன்றினால் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முனன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இணைந்து களமிறக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக 34 வீதமானர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய தலைவர்களை 28 வீதமானவர்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றனர்.

எவ்வாறெனினும் ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பொது வேட்பாளருக்கே கூடுதலான மக்கள் ஆதரவு காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.