ஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்
Monday, 09 Dec 2019

ஐக்கிய தேசிய முன்னணி புதிய பெயரில்

21 July 2019 01:21 pm

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி புதிய கூட்டணிக்கு ஜனநாயக தேசிய முன்னணி என்று பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்குரிய இலட்சனை மற்றும் கொடி என்பவை முன்மொழியப்பட்டுள்ளதுடன், அவை பல வர்ணங்களில் அமைந்திருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தலைமைக் குழுவை உள்ளடக்கிய புதிய கூட்டணியின் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப புதிய கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை 10 மணி சுப நேரத்தில் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் புதிய கூட்டணி பிரபலப்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

KK