கடன் பிரச்சினையே பெரிய பிரச்சினை
Tuesday, 10 Dec 2019

கடன் பிரச்சினையே பெரிய பிரச்சினை

21 July 2019 11:10 am

நாட்டின் கடன் பிரச்சினையே மிகவும் பெரிய பிரச்சினையாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொல பிரதேசத்தில் சந்தையை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடக்கும் நிலையில் அதனை விடவும் பாரிய சவாலாக கடன் பிரச்சினை அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குண்டுத் தாக்குதல்களின் பின்னர் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என பலரும் கூறிய போதிலும் இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் கண்மூடித்தனமாக கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.