மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் தொழிலாளர்கள்
Monday, 27 Jan 2020

மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் அஞ்சல் தொழிலாளர்கள்

21 July 2019 10:24 am

இன்று (21) நள்ளிரவு முதல் 24 மணி ​நேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது. 

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டிருந்தது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளை முன்வைத்தே  அவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர். 

KK