முன்னாள் சட்ட மா அதிபர் கைது செய்யப்படுவாரா?
Wednesday, 11 Dec 2019

முன்னாள் சட்ட மா அதிபர் கைது செய்யப்படுவாரா?

20 July 2019 10:04 pm

முன்னாள் சட்ட மா அதிபர் யுவன்ஜன் விஜயதிலக்கவை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக யானைத் தந்தங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுவன்ஜன் சட்ட மா அதிபராக கடமையாற்றிய காலத்தில் அவரது வீட்டிலிருந்து யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

எனினும் அது தொடர்பில் எவ்வித சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வு பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் காவல்துறையினர் ஆலோசனை கோரியுள்ளனர்.

இதன் போது முன்னாள் சட்ட மா அதிபரை கைது செய்து வழக்குத் தொடர முடியும் என தற்போதைய சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

இதன்படி முன்னாள் சட்ட மா அதிபர் யுவன்ஜன் விரைவில் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.