பொதுத் தேர்தலில் போட்டியிடுவாரா மைத்திரி ?
Monday, 27 Jan 2020

பொதுத் தேர்தலில் போட்டியிடுவாரா மைத்திரி ?

20 July 2019 09:57 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது.
 
இது தொடர்பிலான யோசனைத் திட்டமொன்றை சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஏதேனும் ஓர் கூட்டணியை அமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாவிட்டால் இந்த யோசனை முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜனாதிபதி மைத்திரிக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.