நிலவை அடைந்து 50 வருடங்கள்
Monday, 09 Dec 2019

நிலவை அடைந்து 50 வருடங்கள்

20 July 2019 04:09 pm

மனிதன் நிலவை அடைந்து இன்றுடன் (20) 50 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு சாடர்ன் V எனும் ரொக்கெட் மூலம் வானை நோக்கி பயணித்த அப்பல்லோ பயணத் திட்டமானது நிலவில் தரையிறக்கபட்டது. நீல் ஆம்ஸ்ட்றோங் ஜூலை 20, 1969 இல், சந்திரனில் கால் வைத்த முதல் மனிதர் ஆனார். இது மனித வரலாற்றில் ஒரு மாபெரும் படியாக கருதப்படுகிறது.

இந்த மாபெரும் வெற்றியை  அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்படவுள்ளதுடன், சாடர்ன் V  ராக்கெட்டின் நேரடி அளவிலான படம் வாஷிங்டனில் உள்ள ரோஸ்பால் ஸ்டேடியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

50 வருடங்கள் பூர்த்தியை கொண்டாடும் முகமாக இந்த வாரம் அமெரிக்கா முழுவதும் நூற்றுக்கணக்கான கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அருங்காட்சியக கண்காட்சிகள், ஆவண கண்காட்சிகள், குழு விவாதங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கலை கண்காட்சிகள் மற்றும் நினைவு பரிசு ஏலம் ஆகியவை இதில் அடங்கும்.

இதற்கிடையில், ஓஹியோ மாநிலத்தில்  நிலவில் இறங்கிய முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சிலை திறந்துவைக்கப்படவுள்ளது.

நியூயார்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

KK