சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் கட்சித் தாவத் தயார்
Monday, 27 Jan 2020

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் கட்சித் தாவத் தயார்

20 July 2019 12:20 pm

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எட்டு உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுஜன முன்னணியின் மாநாட்டில் இவர்கள் கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

மலர்மொட்டு கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளை வழங்குவதாக மொட்டு கட்சி உறுதிமொழி வழங்கியுள்ளது.