மஹிந்த தோல்வியடைந்தது மஞ்சள் கடவையினால்
Monday, 09 Dec 2019

மஹிந்த தோல்வியடைந்தது மஞ்சள் கடவையினால்

20 July 2019 12:05 pm

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கான காரணம்  மஞ்சள் கோட்டைக் கடப்பதை கட்டாயமாக்கியதன் விளைவாகும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளம் நிபுணர்களின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியின் பின் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொண்ட போதிலும், தோல்விக்கான காரணம் குறித்து விசாரித்த போது  மஞ்சள் கடவை பிரச்சினையை அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் கடவையை கட்டாயமாக்கியதன் பின்னர் அதன் சட்டங்களை மீறியவர்களுக்கு பாதை விதிகள் தொடராக விழிப்புணர்வை ஏற்படுத்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால், சில நபர்கள் கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள சில அரசு நிறுவனங்களை சந்தித்தபோது இது குறித்து நான் விசாரித்தேன்.அவர்களுக்கு தேநீர் குடிக்க 15 நிமிடங்கள் மட்டுமே உள்ளன. பௌத்தாலோக்க மாவத்தை வந்து தேநீர் அருந்தும்போது, தேநீர் குடிக்க வேண்டிய நேரம் முடிந்துவிடுகிறது. குறுக்குவழியில் செல்ல இருந்த வாய்ப்புகள் இந்த கட்டாயா மஞ்சள் கடவை சட்டத்தினால்  இல்லாமல் போயுள்ளது. மஞ்சள் கோட்டில் மாறவில்லை என்றால் சுமார் ஒரு மணி நேரம் வைத்துக்கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  வகுப்புகளில் கலந்து கொள்ள கூறுகிறார்கள். இதன்  காரணமாக பலர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.அதனால்தான் வாக்களிக்காததற்குக் காரணம் மஞ்சள் கோட்டைக் கடப்பது கட்டாயமாக்கியதனாலாகும்." என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

KK