UNP இலிருந்து புதிய கூட்டணி

UNP இலிருந்து புதிய கூட்டணி

20 July 2019 10:13 am

அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து புதிய கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகிறது.  அதற்குரிய புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகஸ்ட் 05ம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணியிலிருந்து ஒரு வேட்பாளர் களமிறக்கப்படுவதாகவும், அவர் UNP உறுப்பினர் என்றும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரின்  பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மேலும் கட்சிக்கு வெளியே சில உறுப்பினர்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

KK