எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளத் தயார்
Wednesday, 11 Dec 2019

எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளத் தயார்

19 July 2019 07:58 pm

எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ளத் தயார் என பாதுகாப்புச் செயலாளர் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் பாதுகாப்பு தொடர்பில் எழும் எந்தவொரு சவால்களையும் எதிர்நோக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21ம் திகதி தாக்குதல் சம்பவத்தின் பின்னர் நாட்டில் இயல்பு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரிகள், மேலும் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்த போதிலும் அவை முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.