கோதாவை அழைத்து வர மஹிந்த சிங்கப்பூர் பறக்கின்றார்

கோதாவை அழைத்து வர மஹிந்த சிங்கப்பூர் பறக்கின்றார்

19 July 2019 07:51 pm

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் சகோதருமான கோதபாய ராஜபக்சவை அழைத்து வருவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச சிங்கப்பூரிற்கு செல்ல உள்ளார்.

நாளை மறுதினம் கோதபாய இவ்வாறு சிங்கப்பூரிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

மஹிந்த ராஜபக்ச உள்நோக்கத்துடன் சிங்கப்பூரிற்கு செல்வதாகவும், கோதபாய ஜனாதிபதி வேட்பாளராகினால் மஹிந்தவினதும் நாமாலினதும் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மஹிந்த இல்லாத கோதபாயவிற்கு அரசியல் பயணம் கிடையாது என்பதனை அனைவருக்கும் உணர்த்தும் வியூகங்களை, மஹிந்த வகுத்து வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

23ம் திகதி கோதபாய நாடு திரும்பவில்லை உண்மையில் மஹிந்தவினால் அழைத்து வருகின்ற நிகழ்வாக இது அமையும் என தெரிவிக்கப்படுகிறது.