அமெரிக்கப் பட்டியலில் கோதாவின் பெயரில்லை
Wednesday, 11 Dec 2019

அமெரிக்கப் பட்டியலில் கோதாவின் பெயரில்லை

19 July 2019 07:44 pm

குடியுரிமையை ரத்து செய்து கொண்டோர் தொடர்பான அமெரிக்க பட்டியலில் கோதபாயவின் பெயர் கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டுப் பகுதிக்கான அறிக்கையில் குடியுரிமையை ரத்து செய்து கொண்ட அமெரிக்கப் பிரஜைகள் பற்றிய விபரப் பட்டியலில் கோதபாயவின் பெயரில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து கொண்டவர்கள் பற்றிய விபரங்கள் இவ்வாறு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு தடவையும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக இன்னமும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் அறிக்கையில் கோதாவின் பெயர் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் பற்றி ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி அறிவிப்பதாக கூறப்படுகின்றது.