மத்திய வங்கி பிணைமுறி மோசடி-08 பேருக்கு பிணை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி-08 பேருக்கு பிணை

19 July 2019 04:35 pm

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்று (19) விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் 10வது பிரதிவாதியான அஜகான் கார்திய புஞ்சிஹேவா ஆகியோர் இன்று நீதிமன்றத்தில்  ஆஜராகி இருக்கவில்லை என்பதுடன், அவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை.

நீதிமன்றில் ஆஜரான ஏனைய 08 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவர்களை 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. 

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.