Dr.சாபீக் வழக்கை விசாரித்த சட்டமா அதிபர் குறித்து முறைப்பாடு

Dr.சாபீக் வழக்கை விசாரித்த சட்டமா அதிபர் குறித்து முறைப்பாடு

19 July 2019 03:28 pm

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாபீக்கின் வழக்கில் குருணாகல் சட்டமா அதிபரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யுமாறு கோரி இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குருணாகல் பொலிஸாரார் கைது செய்யப்பட்ட வைத்தியர் சாபிக் குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியராக பணிபுரிந்தார். குறித்த வைத்தியர் தொடர்பாக விசாரிக்க கூறிய குருணாகல் பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் மனைவி குருணாகல் வைத்திய சாலையில் வைத்தியராக கடமைபுரிவதாகவும், குறித்த வழக்கை விசாரணை செய்யும் குருணாகல் சட்டமா அதிபரின் மனைவியும் குருணாகல் வைத்திய சாலையில் வைத்தியராக கடமைபுரிவதாக இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் செய்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

KK