கோதுமைமாவின் விலை - அறிக்கை கேட்ட பிரதமர்

கோதுமைமாவின் விலை - அறிக்கை கேட்ட பிரதமர்

19 July 2019 01:28 pm

கோதுமை மாவின் விலை திடீரென 08 ரூபாவால்  அதிகரித்தது குறித்து அறிக்கை கோர பிரதமர் முடிவு செய்துள்ளார்.

நேற்று(18) அலரிமாளிகையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு  கோதுமை மாவின் விலையை உயர்த்துவது குறித்து கோதுமை மாவு இறக்குமதியாளர்கள் முடிவு செய்தமை நியாயமற்றது என  பிரதமர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக வாழ்க்கைச் செலவுக் குழுவிடம் விசாரிக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ப்ரிமா  நிறுவனத்தின் உற்பத்தியான கோதுமை மா ஒரு கிலோ 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாண் ஒரு ராத்தலின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் அரச தலையீட்டின் காரணமாக பாணின் விலை முன்னைய விலைக்கே வழங்க தீர்மானிக்கப்பட்டது.

KK