நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை விரைவில்
Wednesday, 11 Dec 2019

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை விரைவில்

19 July 2019 10:34 am

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது குற்றம் சுமத்தப்படும் நபர்களை பாதுகாக்கும் நோக்கிலானது என நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அதிகாரிகளை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஜனாதிபதியும் பிரதமரும் முன்னிலையாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.