கோதாவின் வழக்கு செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு
Friday, 13 Dec 2019

கோதாவின் வழக்கு செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு

12 July 2019 11:48 am

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவன்ட்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோதபாயவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கோதபாய ராஜபக்ச மற்றும் நிசாங்க சேனாதிபதி ஆகிய இருவரும் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.