ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு செல்லும் ஜி.எல் இன் கதை பொய்யானது
Thursday, 21 Nov 2019

ஜனாதிபதி நீதிமன்றத்திற்கு செல்லும் ஜி.எல் இன் கதை பொய்யானது

11 July 2019 03:30 pm

19 வது திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக மற்றும் அவரது பதவிக்காலம் தொடர்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கருத்தைத் நாடுவதற்காக ஜனாதிபதி இன்று(11) செயல்படுவார் என்று பொதுஜன பெரமுனவினால் நடத்திய பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை என்று ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.

19 ஆவது திருத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி ஜனாதிபதி இன்று (11) உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பேராசிரியர் ஜி.எல். திரு. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தரப்பு இதைச் செய்கிறது எனவும், வியாழக்கிழமை (11) அதற்கான நல்ல நேரத்தை பார்த்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சபாநாயகரின் கையொப்பத்திற்குப் பிறகு சட்டத்தை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவர் கூறினார். இருப்பினும், 19 வது திருத்தம் ரத்து செய்யப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று அவர் கூறினார்.

KK