ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஹிருணிகா

ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஹிருணிகா

11 July 2019 11:46 am

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தனக்கு தெரிந்த விடயங்களை வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்டால் தெரிவுக்குழுவில்  முன்னிலையாகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதால் ஜனாதிபதியும் தனக்கு தெரிந்த விடயங்களை தெரிவுக்குழு முன்னிலையில் வெளிப்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (10) அலரிமாளிகையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே ஹிருணிகா இதனை தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழு முன்னிலையில் தாக்குதலைப் பற்றி தனக்கு என்ன தெரியும், பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது என்பதை பற்றி விளக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

KK