இராணுவத் தளபதி பதவியின் இரகசியம்

இராணுவத் தளபதி பதவியின் இரகசியம்

10 July 2019 09:05 am

இராணுவத் தளபதி பதவியில் இருப்பதன் மூலம் கிடைக்கப் பெறும் நன்மைகளின் காரணமாகவே அந்தப் பதவியில் நீடிக்க பலரும் முயற்சிக்கின்றார்கள் என்றார் அது மிகைப்படாது.

சில காலங்களுக்கு முன்தனாக இடம்பெற்ற ஓர் சம்பவத்தை நாம் இங்கு விபரிக்க உள்ளோம்.

வெளிநாட்டு இராணுவ பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தால் அவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்குவது ஒர் வழமையான மரபாக காணப்படுகின்றது.

வெளிநாட்டு இராணுவத்தினரின் பாரியார்மாருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

சேவா வனிதா பிரிவினால் இந்தப் பரிசுப் பொருட்களுக்கான கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றன.

இந்திய இராணுவத் தளபதியொருவர் இலங்கை வந்திருந்த போது அவரது பாரியாருக்கு, இலங்கையின் அப்போதைய இராணுவத் தளபதியின் பாரியார் வோக் ஜூவலர்ஸில் நகை ஒன்றை பரிசாக வாங்கி கொடுத்தார்.

இந்த நகையின் பெறுமதி 1.5 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் ஸ்டோன் என்ட் ஸ்ரிங் நிறுவனத்தில் மற்றுமொரு ஆபரணம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் ஆபரணத்தின் பெறுமதி 15000 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு ஆபரணங்களில் இந்திய இராணுவத் தளபதியின் பாரியாருக்கு 15000 ரூபா பெறுமதியான ஆபரணம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியின் பாரியாரது பெயரில் இலங்கை இராணுவத் தளபதியின் பாரியார் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஆபரணத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறான சலுகைகள் வரப்பிரசாதங்கள் காணப்படுவதனால் இராணுவத் தளபதி பதவிக்காக போட்டி நிலவி வருகின்றது.