ஜே.வி.பிக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும்
Wednesday, 08 Jul 2020

ஜே.வி.பிக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும்

9 July 2019 10:49 am

ஜே.வி.பி கட்சிக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரபல வர்த்தகர்கள் சிலரை சந்தித்த போது பிரதமர் ரணில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் ஜே.வி.பியை உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் எனவும், குறைந்த பட்சம் மூன்று நான்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சியினர் ஒழுக்கம், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய நல்ல பண்பியல்புகளை கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த பண்பியல்புகளின் ஊடாக நாட்டு மக்களுக் இதுவரையில் போதியளவு சேவை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுக்கும் எம்மைப் போன்றே வயதாகின்றது எனவும், அதனால் அவர்களிடம் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.