இதோ மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர்

இதோ மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர்

7 July 2019 10:12 am

2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி விக்ரமசிங்கவின் அரசியல் பிரவேசம் பற்றிய தகவல்கள் லங்கா நியூஸ் வெப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

கட்சி அரசியல் நடவடிக்கைகளினால் படுகுழியில் தள்ளப்பட்டுள்ள நாட்டை இதே வழியில் செல்ல முடியாது என தில்ருக்ஸி தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் மோசடிகளை தவிர்ப்பது தொடர்பில் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்ததனைப் போன்றே நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தற்போதுள்ள ஒரே பெண் வேட்பாளர் தில்ருக்ஸி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகளின் துணையின்றி தனித்து போட்டியிடுவதற்கு உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.