கோதபாயவின் மற்றுமொரு மோசடி?
Monday, 27 Jan 2020

கோதபாயவின் மற்றுமொரு மோசடி?

5 July 2019 08:08 pm

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தனது அதிகாரத்தை எவ்வாறு துஸ்பிரயோகம் செய்தார் என்பது பற்றிய மற்றுமொரு தகவல் அம்பலமாகியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் கட்டிட நிர்மான நடவடிக்கைகளின் போது கோதபாய அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அம்பலமாகியுள்ளன.

அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் அமைப்பது தொடர்பில் இவ்வாறு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கட்டட நிர்மான ஆலோசனை வழிகாட்டல்களை முதித்த ஜயகொடி என்னும் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

எனினும், அதிகாரபூர்வமாக எவ்வித விலை மனுக்கோரல்களையும் மேற்கொள்ளாது இந்த நிறுவனம் சேவை வழங்கியுள்ளதுடன் மேலதிமாக அரசாங்கத்தின் பாரியளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

விலை மனுக் கோரல்கள் இன்றி இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகவும் கோதபாயவின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

முதித்த ஜயகொடி நிறுவனம் சுமார் 32 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.