Dr.சாபிக் விவகார DIGக்கு பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிசு

Dr.சாபிக் விவகார DIGக்கு பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிசு

22 June 2019 09:36 pm

தௌகீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய வைத்தியரினால் சிங்கள தாய்மார்கள் 4000 பேருக்கு கருத்தடை செய்ததாக பொய்யான செய்தியை உருவாக்கி நாட்டினுள் இனவாதத்தை பரப்புவதற்காக முயற்சி செய்த குருணாகல் DIG கித்சிறி ஜயலத்திற்கு பொலிஸ் ஆணைக்குழு பரிசொன்றை வழங்கியுள்ளது.

குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத்தை புத்தளம் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் மீது பாரிய 3 குற்றச்சாட்டுக்கள் இருக்கத்தக்கதாக  இந்த  இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

Dr சாபிக்: DIG யின் வாக்குமூலம்

கருத்தடை செய்திக்கும் தனக்கும் எவ்வித தொடர்ப்பும் இல்லை எனவும், தன்னை இதில் தொடர்பு படுத்தியது திவயின பத்திரிக்கை மற்றும் ரந்துனு உள்ளிட்ட பலர் எனவும் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் முன் நீண்ட வாக்குமூலம் அளித்த DIG தன்னை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"நான் குற்றமற்றவன் சேர், பலோப்பியன் கதை பற்றி எனக்கு தெரியாது.என்னை இந்த கதையில் தொடர்பு படுத்தியது திவயின பத்திரிக்கை. அவர்கள் இதில் தப்பித்துக்கொள்ள என்னை மாட்டிவிடுகிறார்கள்.இது மோசமா வேலை சேர். நான் யார் உதவியும் இல்லாமல் இருக்கிறேன்." என DIG வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்த  4000 கருத்தடை சிகிச்சை திவயின பத்திரிகை மற்றும் DIG கித்சிறி ஜயலத்தின் இணைந்த செயற்பாடு என லங்கா நியூஸ் வெப் ஆகிய நாங்கள் முன்பிருந்தே தெரிவித்திருந்தோம். விசாரணைகள் மூலம் தற்பொழுது இந்த செய்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் CIDயின் விசாரணைகளின் போது திவயின பத்திரிக்கை மற்றும் ரந்துனு ஊடகவியலாளர் செய்தது  விசாரணையில் DIGயை கோர்த்துவிட்டது.

இதற்கமைய தொலைபேசியுடனான தரவுகளை பரிசோதனை செய்யும் போது திவயின பத்திரிக்கைக்கு தகவல் வழங்கியிருப்பது DIG என உரிஜித்தப்படுத்தப்பட்டுள்ளது. DIG இதில் இருந்து தப்பித்துக்கொள்ள திவயின பத்திரிக்கை மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது வைத்தியர் சாபிக்கின் வாக்குமூலம் வழங்குவார் என ஆனால் தற்பொழுது இனவாதத்தை பரப்பும்  கித்சிறி ஜயலத் போன்றவர்கள் வாக்குமூலம் வழங்குவதையே பார்வையிட வேண்டியுள்ளது.

நான் எதை செய்தாலும் எனது இனமக்களின் நன்மைக்காகவே செய்தேன். இந்த CIDயினருக்கு தனது இனம் தொடர்பாக எவ்வித நல்லெண்ணமும் இல்லை என DIG குறிப்பிட்டுள்ளார்.

KK