வலுவான பயணமொன்றை ஆரம்பித்திருந்த வேளையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது
Friday, 05 Jun 2020

வலுவான பயணமொன்றை ஆரம்பித்திருந்த வேளையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது

18 June 2019 03:01 pm

வலுவான பயணமொன்றை ஆரம்பித்திருந்த வேளையிலேயே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

நீண்ட காலமாக நாடு எதிர்நோக்கியிருந்த பொருளாதார பின்னடைவுகளிலிருந்து மீட்டு, ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்திய போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையில் நாடு மிகச் சிறந்த நிலையை அடைந்திருந்த வேளையில் இந்த தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகின் பலம்பொருந்திய நாடுகள் அனைத்தினதுமே வெற்றியானது மத இன நல்லிணக்கத்தின் ஊடாக எட்டப்பட்டதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.