ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி எனக்கும் உண்டு
Sunday, 07 Jun 2020

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி எனக்கும் உண்டு

18 June 2019 11:19 am

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகுதி தமக்கும் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தவொரு அரசியல் கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை எனவும் எதிர்வரும் மாதத்தில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 38 ஆண்டுகளாக சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அனுபவம் மிக்க தமக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதி உண்டு என்ற போதிலும் தமக்கு அவ்வாறான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.