தாஜ் சமுத்ரா ஹோட்டல் மீது ஏன் தாக்குதல் நடத்தவில்லை?
Sunday, 07 Jun 2020

தாஜ் சமுத்ரா ஹோட்டல் மீது ஏன் தாக்குதல் நடத்தவில்லை?

18 June 2019 11:13 am

உயிர்த்த ஞாயிறு தினமன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் போது ஏன் தாஜ் சமுத்ரா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதனை விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஹோட்டலில் சிலர் இருந்த காரணத்தினால் இவ்வாறு குண்டு வெடிக்கச் செய்யப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ஹோட்டலில் யார் இருந்தார்கள் என்பது பற்றி தமக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்ததாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்தியொன்று செயற்பட்டுள்ளது என்பதனை தெளிவாக கூற முடியும் எனவும், இந்த விடயங்கள் அம்பலப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.