விண்ணில் ஏவப்படும் இலங்கையின் முதலாவது செய்மதி
Friday, 13 Dec 2019

விண்ணில் ஏவப்படும் இலங்கையின் முதலாவது செய்மதி

15 June 2019 12:33 pm

இலங்கை பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட முதலாவது செய்மதியான ராவண் 1 செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணில் ஏவப்படுமென ஆதர்சி கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் திகதி குறித்த செய்மதி சர்வதேச விண்வெளி மத்தியநிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

ராவண் செய்மதியின் உருவாக்கம் இலங்கை விண்வெளித்துறை தொழிநுட்பத்தில் பாரிய முன்னேற்றமென ஆதர்சி கிளார்க் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

ராவண் செய்மதி நெனோ தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

அளவில் சிறியதாக இருந்தபோதிலும் பாரிய செய்மதியில் காணப்படும் அனைத்து தொழிநுட்பங்களை கொண்டதாக இது காணப்படுகிறது.

புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விண்ணுக்கு இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது.

ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இதற்கு ராவணா-வன் என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

KK