அமைதி நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?
Friday, 13 Dec 2019

அமைதி நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?

13 June 2019 04:14 pm

நடப்பு ஆண்டுக்கான உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வினை ஆஸ்திரேலியாவைச்  சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று மேற்கொண்டது. இந்த ஆய்வு மக்களின் பாதுகாப்பு, உள்நாட்டு பிரச்சனைகள் போன்ற 23 காரணிகளைக் அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஐஸ்லாந்து நாடு உலகிலேயே அதிக அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளாக இந்நாடு அமைதி பட்டியலில் தொடர்ந்து முதல் இடமே பெற்றுள்ளது. இந்த ஆண்டும் ஐஸ்லாந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுக்கல், டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மொத்தம் 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்த நிலையில் இலங்கை 72வது இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 5 இடங்கள் கீழே இறங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு இந்தியா 141வது இடத்தை பிடித்துள்ளது. 

இந்த அறிக்கையில் உலகளவில் அமைதியான சூழல் கடந்த ஐந்தாண்டுகளில் முதன்முறையாக அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த அறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், மியான்மர், சீனா, இந்தோனேஷியா, பிலிபைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

KK