ஹரி பொட்டர் கதாபாத்திரம் நிஜத்தில்

ஹரி பொட்டர் கதாபாத்திரம் நிஜத்தில்

12 June 2019 03:02 pm

பிரிட்டன் எழுத்தாளரான ஜே.கே.ரவ்லிங் என்பவரால் எழுதப்பட்ட ஹரி பொட்டர்  நாவலானது பின்னர் பல்வேறு பாகங்களாக ஹாலிவுட் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே உலகம் முழுவதும் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்க கூடியதாகும்.

இதில் வேற்று கிரகவாசி போன்ற உருவ அமைப்பைக் கொண்ட "டோபி (Dobby)" எனப்படும் கதாபாத்திரம் வெகுவாக கவர்ந்தது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் விவின் கோம்ஸ். இவர் தனது முகநூல் பக்கத்தில் வீட்டின் சிசிடிவி காட்சி ஒன்றை சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.

விவின் ஒரு நாள் காலை தனது வீட்டின் சிசிடிவி கேமிரா காட்சிகளை வழக்கம் போல செக் செய்து பார்த்தார். அப்போது நள்ளிரவில் "டோபி (Dobby)" போன்ற உருவம் நடமாடுவதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிடவே, படுவைரலாக சென்றுள்ளது. இதனை கண்டு பல்வேறு நாட்டு நெட்டிசன்களும் கோடிக்கணக்கில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை 3 கோடிக்கும் மேற்பட்டோர் இதுவரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

KK