எம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா?
Wednesday, 20 Jan 2021

எம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா?

19 May 2018 07:10 pm

பேஸ்புக்கிற் தொழிற்பாடு பற்றிய பல கேள்விகளுக்கு விடைகள் இன்னமும் கிடைக்காமலேயே உள்ளது. ஆனால் ஒர விடயத்தை ஃபேஸ்புக் எமக்கு வெளியிட்டிருக்கிறது.

அதுதான் பேஸ்புக் எம்மைப் பின்தொடரும் விடயம். நாம் பேஸ்புக்கைிலிருந்து வெளியேறிய (லொக் அவுட்) பின்னரும் எம்மைப் ஃபேஸ்புக் பின்தொடருமாம். அந்த வழிகளைப் பார்ப்போம்.,

அந்தவகையில் நான்கு முக்கியமான கருவிகளைப் (Tool) பற்றி பேசியிருக்கிறது ஃபேஸ்புக்

1) Social plugins:

எந்த இணையதளத்துக்குச் சென்றாலும் “எங்களை லைக் பண்ணுங்க பாஸ்” என ஃபேஸ்புக்கின் லைக் சிம்பிள் முன்னால் வந்து நிற்கும். அந்த ப்ளக் இன் இருக்கும் எந்த இணையதளத்துக்குச் சென்றாலும் ஃபேஸ்புக்கும் நம்மை பின்தொடர்கிறது என்று அர்த்தம்.

2) Facebook Login:

இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நிறைய இணையதளங்களில் புதிதாக ரெஜிஸ்டர் செய்யாமல், ஃபேஸ்புக் அல்லது கூகுள் லாக் இன்களைப் பயன்படுத்தி உள்ளே நுழையலாம். அபப்டி நுழையும்போது ஃபேஸ்புக் நமது நடவடிக்கைகள் ஒன்றை விடாமல் கவனிக்கிறது.

3) Facebook Analytics:

நிறைய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஃபேஸ்புக் தரும் சேவைகளைப் பயன்படுத்துவதுண்டு. அந்த இணையதளங்களில் நம் கண்களுக்கு ஃபேஸ்புக்கின் எந்த விஷயமும் தெரியாது. ஆனால், அப்போதும் நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை உன்னிப்பாக நோட்ஸ் எடுத்துக்கொண்டுதான் இருக்கும்.

4) Facebook ads and measurement tools:

ஃபேஸ்புக் விளம்பரதாரர்களில் விளம்பரங்களைப் பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளை நாம் பயன்படுத்தினாலும் ஃபேஸ்புக்கின் கண்காணிப்பின் கீழ் நாம் வந்துவிடுவோம். சுருக்கமாகச் சொன்னால் நம்மால் ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது எனலாம்.