பாக்கிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கழுதைகள்
Sunday, 09 Aug 2020

பாக்கிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கழுதைகள்

5 February 2019 06:16 am

உலகில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது.

சீனாவை பொறுத்த மட்டில் பாரம்பரிய மருந்துகளை தயார் செய்ய கழுதைகள் தேவைப்படுவதால் அங்கு கழுதைகளின் விலை உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் கழுதைகள் எண்ணிக்கையில் 3வது இடத்தில் இருக்கும் பாக்கிஸ்தான் முதல் இடத்தில் இருக்கும் சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளது.

இதற்காக பாக்கிஸ்தானில் கழுதை பண்ணைகளை அதிகப்படுத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் 80 ஆயிரம் கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய பாக்கிஸ்த்தான் அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.