வாரியபொலயில் என்ன நடந்தது? பிரதேசத்திற்கு பாதுகாப்பு

வாரியபொலயில் என்ன நடந்தது? பிரதேசத்திற்கு பாதுகாப்பு

18 June 2019 08:48 am

வாரியபொல மிரிஹம்பிடிய அமைதியின்மையை அடுத்து அங்கு  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மிரிஹம்பிடியவில் இன்று பகல் வேளை  பள்ளிவாயலுக்கு வந்த பெரும்பான்மை வாலிபர்கள் சிலர் பள்ளிவாயல் மேல் மாடிக்கு சென்று ஹிப்ல் மதரஸா நடக்கும் இடத்தை நோட்டமிட்டுள்ள அதேவேளை அடிப்படைவாதம் போதிக்கப்படும் இடம் என கூறி சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அப்பிரதேச முஸ்லிம் சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளதை தொடர்ந்து அங்கு முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ள அதேவேளை அங்கிருந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை தாக்குதல் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : மடவளை நியுஸ்